உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அவரை குடும்பத்தினர் அனுமதித்துள்ளனர். ஆனால் ஓரிரு நாட்களிலேயே அவர் இறந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசில் பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரில் கடந்த ஒருவாரமாக எங்களது பெண்ணின் உடலை காட்டாமலே வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிப்பதாக கூறி வந்தனர். பின்னர் ஒருவாரம் கழித்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். சிகிச்சை செலவாக ரூ.6 லட்சம் கட்ட வேண்டும் என்றும் பில் கொடுத்தனர்.
கடந்த ஒருவாரமாக அவரது உடலை காட்டாமல் மறைத்து வைத்து சிகிச்சை அளித்ததன் மூலம் இறந்து போன உடலுக்குத்தான் சிகிச்சை அளித்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.இதுகுறித்து போபால் போலீசார் வழக்கு பதிவு செய்து மருத்துவமனையில் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் அங்கிருந்த 4 டாக்டர்கள் தலைமறைவாகினர். தற்போது அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி