அவருடன் 2 மகன்களும் செல்வதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் விழா அமைப்பாளர்கள் பிரபுதேவாவின் பாஸ்போர்ட்டையும், மகன்களின் பாஸ்போர்ட்டையும் தவறவிட்டனர். இதையடுத்து பிரபுதேவா விழாவில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.
பாஸ்போர்ட் காணாமல்போனதை அறிந்து ஷாக் ஆனார் பிரபுதேவா. இதுதொடர்பாக சென்னை வந்து போலீசில் புகார் தர முடிவு செய்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது,‘பாஸ்போர்ட் தொலைந்துவிட்டால் உடனடியாக அதுபற்றி போலீசில் புகார் தர வேண்டும். நானும் என் மகன்களும் அமெரிக்காவில் நடக்கும் விருது விழாவில் பங்கேற்க எண்ணியிருந்தோம். அது நிறைவேறவில்லை. புதிய பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்துள்ளோம். அது கிடைக்க சில நாட்கள் ஆகும் என்று தெரிகிறது. அதுவரை ஷூட்டிங்கில் கவனம் செலுத்துவேன்‘ என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி