செய்திகள் குழந்தைக்கு பால் கொடுப்பதை தடுத்த அதிகாரிகள்!…

குழந்தைக்கு பால் கொடுப்பதை தடுத்த அதிகாரிகள்!…

குழந்தைக்கு பால் கொடுப்பதை தடுத்த அதிகாரிகள்!… post thumbnail image
நாட்டிங்காம்:-இங்கிலாந்தில் நாட்டிங்காம் பகுதியில் மழைபெய்து கொண்டிருந்ததால் அருகில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு சென்று தனது குழந்தைக்கு பால் கொடுக்க முயன்ற பெண்ணை அந்நிறுவன அதிகாரிகள் தடுத்து வெளியில் அனுப்பியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து 25 வயதான வொய்லோட்டோ கெமோர் என்ற இந்த இளம்பெண் கூறுகையில், சம்பவத்தன்று துணி எடுப்பதற்காக எனது தந்தை அந்நிறுவனத்திற்குள் சென்றுவிட்டார். அப்போது மழை பெய்த காரணத்தால் நானும் அங்கு சென்றேன். அப்போது பிறந்து மூன்றே மாதங்களான என் இளைய மகன் பசியால் அழத் தொடங்கினான்.எனவே நான் அவனது பசியை போக்க அவனுக்கு பால் கொடுத்தேன்.

அப்போது அங்கு வந்த நிறுவன ஊழியர் என்னிடம் தயவு செய்த நீங்கள் வெளியே செல்லுங்கள். இங்கு குழந்தைகளுக்கு பால் கொடுக்கக்கூடாது. இது எங்கள் நிறுவன விதிமுறைகளுக்கு எதிரானது. என்று தெரிவித்தார்.இச்சம்பவம் எனக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தி விட்டது. எனவே நிரிவாகத்தினர் இதற்கு என்னிடம் கட்டாயமாக மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி