இதன் பின்னர் கோரி ஆண்டர்சனும், கேப்டன் ரோகித் ஷர்மாவும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். ஸ்கோர் மந்தமாகவே நகர்ந்தது. 10 ஓவரில் அந்த அணி 2 விக்கெட்டுக்கு 57 ரன்களே எடுத்திருந்தது.பிற்பாதியில் மும்பை வீரர்கள் ரன் சேகரிப்பில் துரிதம் காட்டினர். அணியின் ஸ்கோர் 109 ரன்களை எட்டிய போது கோரி ஆண்டர்சன் 39 ரன்களில் (31 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) அஸ்வினால் ரன்-அவுட் செய்யப்பட்டார். அடுத்த சில ஓவர்களில் மும்பையின் ரன்வேகத்தை சென்னை பவுலர்கள் வெகுவாக கட்டுப்படுத்தினர். அரைசதம் அடித்த கையோடு ரோகித் ஷர்மா (50 ரன், 41 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) நடையை கட்டினார். இதைத் தொடர்ந்து 19-வது ஓவரை வீசிய வேகப்பந்து வீச்சாளர் மொகித் ஷர்மா அந்த ஓவரில் பொல்லார்ட் (12 ரன்), அம்பத்தி ராயுடு (1 ரன்), ஹர்பஜன்சிங் (0) ஆகிய 3 பேரை காலி செய்து மேலும் இறுக்கினார். கடைசி ஓவரில் சிதம்பரம் கவுதம் அடித்த பவுண்டரியும், ஜாகீர்கான் அடித்த சிக்சரும் மும்பை அணி 140 ரன்களை தொட வைத்தது.நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. சென்னை தரப்பில் மொகித் ஷர்மா 4 விக்கெட்டுகளும், ல்பனாஸ் 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.
மும்பை அணி நிர்ணயித்த 141 ரன்களை நோக்கி சென்னை அணியின் சுமித்தும் மெக்கல்லமும் தங்களது துரத்தலை தொடங்கினர். சுமித் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை பின்தொடர்ந்து களமிறங்கிய ரெய்னா 1 ரன்னில் ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.எனினும் மெக்கல்லம் தனது அதிரடி ஆட்டத்தினால் அரைச்சதத்தினை பூர்த்தி செய்தார். டு பிளிசஸ் தனது பங்கிற்கு 20 ரன்கள் எடுத்து அவுட்டானர். பின்னர் களமிறங்கிய சேன்னை கேப்டன் டோனி தலா ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் விளாசினார்.இதனால் சென்னை அணி 19 ஓவர் முடிவில் வெற்றி இலக்கை எட்டியது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த மெக்கல்லம் 53 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சருடன் 71 ரன்கள் குவித்தார். சென்னை அணிக்கு இது மூன்றாவது வெற்றியாகும்.
MUM – Inning
Batsman R B M 4s 6s S/R
Hussey M. b Hilfenhaus B. 1 7 8 0 0 14.29
Tare A. c Raina S. b Sharma M. 23 19 19 4 0 121.05
Anderson C. run out Ashwin R. 39 31 55 3 1 125.81
Sharma R. c Smith D. R. b Hilfenhaus B. 50 41 60 3 2 121.95
Pollard K. b Sharma M. 12 11 23 1 0 109.09
Rayudu A. c Raina S. b Sharma M. 1 2 4 0 0 50.00
Gautam C. not out 7 4 11 1 0 175.00
Singh H. c McCullum B. b Sharma M. 0 2 1 0 0 0
Khan Z. not out 7 3 7 0 1 233.33
Extras: (b 1) 1
Total: (20 overs) 141 (7.1 runs per over)
Bowler O M R W E/R
Pandey I. 3.6 0 21 0 5.83
Hilfenhaus B. 3.6 0 39 2 10.83
Ashwin R. 3.6 0 20 0 5.56
Sharma M. 3.6 0 14 4 3.89
Raina S. 2.6 0 32 0 12.31
Jadeja R. 0.6 0 14 0 23.33
CHE – Inning
Batsman Status R B M 4s 6s S/R
Raina S. st Gautam C. b Singh H. 1 4 9 0 0 25.00
Smith D. R. c Anderson C. b Ojha P. 29 22 25 0 4 131.82
McCullum B. not out 71 53 96 8 2 133.96
Du Plessis F. st Gautam C. b Singh H. 20 25 36 0 0 80.00
Dhoni M. not out 14 11 26 1 1 127.27
Extras: (w 2, nb 1, lb 4) 7
Total: (18.6 overs) 142 (7.5 runs per over)
Bowler O M R W E/R
Anderson C. 1.6 0 23 0 14.38
Pollard K. 0.6 0 10 0 16.67
Singh H. 3.6 0 27 2 7.50
Khan Z. 3.6 0 31 0 8.61
Ojha P. 3.6 1 25 1 6.94
Malinga L. 3.6 0 22 0 6.11
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி