செய்திகள்,திரையுலகம் மீண்டும் அம்மன்!…

மீண்டும் அம்மன்!…

மீண்டும் அம்மன்!… post thumbnail image
சென்னை:-பதினெட்டு வருடங்களுக்கு முன்பு தமிழ், தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘அம்மன்’. அத்திரைப்படத்தை இயக்கிய கோடிராம கிருஷ்ணா அடுத்து இயக்கி இருக்கும் படம் ‘மீண்டும் அம்மன்‘. இந்தப் படத்தில் அம்மன் வேடத்தில் பானுப்ரியா நடிக்கிறார்.

கதாநாயகனாக ரிச்சர்ட் நடிக்கிறார். கதாநாயகியாக குட்டி ராதிகா நடிக்கிறார். மற்றும் நாகமணி, ஜெய்வாணி, கோலிசோடா வில்லன் மது ஆகியோர் நடிக்கிறார்கள்.தனது பக்தையையும்,அவளது குடும்பத்தையும் காக்க அம்மன் அரணாக இருக்கிறார்.

அம்மனின் அரனை மீறி அந்த குடும்பத்தை எப்படியாவது அழித்தேத் தீருவது என்று போராடும் தீயசக்திக்கும் இடையே நடக்கும் போராட்டமே படத்தின் கதை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி