மதுரா:-முன்னாள் பாலிவுட் கனவுக்கன்னி ஹேமமாலினி பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா வேட்பாளராக உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் போட்டியிடுகிறார்.சமீபத்தில் அவர் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது, தங்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ரஜினியை சந்தித்து பேசிய பின்னர், தமிழகத்தில் மட்டும் இன்றி நாட்டின் பல பகுதிகளில் பாரதீய ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்து இருப்பதாக பேசியுள்ளார்.
ரஜினி என்றைக்குமே ஒரு கிங் மேக்கராக இருக்கவே விரும்புகிறார் என்றும், அவர் அரசியலுக்கு வந்தால், எங்களை போன்ற பல தலைவர்களை வீட்டுக்கு அனுப்பிவிடும் செல்வாக்கு அவருக்கு இருக்கின்றது என்றும் கூறினார்.
ரஜினி-மோடி சந்திப்பு விளைவாக தமிழ்நாடு, கர்நாடகம், மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களில் பாரதீய ஜனதாவின் செல்வாக்கு கூடியிருப்பதாக அவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி