செய்திகள்,திரையுலகம் விஜய்யின் ‘சைவம்’ படத்திற்கு ஹாலிவுட்டில் பின்னணி இசை!…

விஜய்யின் ‘சைவம்’ படத்திற்கு ஹாலிவுட்டில் பின்னணி இசை!…

விஜய்யின் ‘சைவம்’ படத்திற்கு ஹாலிவுட்டில் பின்னணி இசை!… post thumbnail image
சென்னை:-சைவம் படத்துக்கு ஹாலிவுட் சவுண்ட் என்ஜினீயர்களை கொண்டு பின்னணி இசை அமைத்திருக்கிறார் விஜய்.பிரமாண்ட ஆக்ஷன் படங்களுக்கு ஆடியோ என்ஜினீயர்களாக பணியாற்றிய மர்ட்டி ஹம்பரரி, மற்றும் செரீஸ் ஜேக்கப்சன் சைவத்துக்கு பின்னணி இசை கோர்த்துள்ளனர்.

இவர்கள் கடைசியாக விஸ்வரூபம் படத்திற்கு இசை கோர்த்தனர். தமிழ்நாட்டில் இருந்து சென்ற சவுண்ட் என்ஜினீயர்கள் ராஜா கிருஷ்ணன், குனால் ராஜன் ஆகியோருடன் இணைந்து இவர்கள் பணியாற்றி உள்ளனர்.சைவம் படத்தின் டைட்டில் தீம் இசை வேண்டாம் என்று ஹாலிவுட் சவுண்ட் என்ஜினீயர்கள் சொன்னார்களாம்.

ஆனால் விஜய் அதுதான் படத்துக்கு உயிரே என்று சொல்ல அதையே சிறப்பாக செய்து கொடுத்திருக்கிறார்கள். படத்தை உலக தரத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக இந்த இசை கோர்ப்பை முடித்து திரும்பியிருக்கிறார் விஜய்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி