வாஷிங்டன்:-தண்ணீரில் குறிப்பிட்ட அளவு ஆல்கஹால் கலந்து மதுபானங்கள் தயாரிக்கப்படுகின்றன. தற்போது அவை திரவ நிலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது அது பவுடர் ஆகவும் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆல்கஹால் விற்பனைக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. அதை தொடர்ந்து இதன் விற்பனை அடுத்த ஆண்டு தொடங்குகிறது.இந்த பவுடர் ஆல்கஹால் ரூ.600, ரூ.900, ரூ.1500 என்ற விலைகளில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதை தண்ணீரில் கலந்தும், உணவு வகைகளில் கலந்து சாப்பிடலாம்.
பவுடர் நிலையில் ஆன ஆல்கஹால் 7 வித சுவைகளில் கிடைக்கும். அவற்றுக்கு மர்கார்டியா, காஸ்மோபாலிட்டன், பவுடரிடா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த தகவலை அமெரிக்காவின் ஆல்கஹால் மற்றும் புகையிலை வரி விதிப்பு வர்த்தகத்துறை தெரிவித்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி