சென்னை:-சூர்யாவுடன் நடிக்கும் ‘அஞ்சான்‘ பட ஷூட்டிங்கை முடித்து கொடுத்த கையோடு தெலுங்கில் ஜூனியர் என்டிஆருடன் புதிய படத்தில் நடித்து வருகிறார் சமந்தா. இப்படத்தின் ஷூட்டிங் நேற்று ஐதராபாத்தில் நடந்தது.
அப்போது ஆக்சன் காட்சியில் சமந்தா நடித்துக்கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக அங்கிருந்த ஒரு கனமான பொருள் சமந்தா கால்மீது விழுந்தது. இதில் காயம் அடைந்த சமந்தா வலியால் துடித்தார்.
ஆனாலும் சமந்தா வலியை பொறுத்துக்கொண்டு தொடர்ந்து நடிப்பதாக கூறியதுடன், இந்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்று அங்கிருந்தவர்களிடம் கேட்டுக்கொண்டார். காயத்துக்கு மருந்துபோட்டுக்கொண்டு கால் மணிநேரம் ஓய்வு எடுத்த சமந்தா தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி