இதில் நடிகர் விஜய், இயக்குநர் நேசன், தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி, படத்தில் நடித்த மகத், சூரி, இசையமைப்பாளர் இமான், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட இப்படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் கலந்து கொண்டனர்.விழாவில் நடிகர் விஜய் பேசும்போது, ‘ஜில்லா’ படம் 100 நாள் ஓடி வெற்றியடைந்தது மிகவும் மகிழ்ச்சி தருகிறது. இந்த வெற்றிக்கு ரசிகர்கள் தான் காரணம். அதனால் ரசிகர்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது வரும் புதுமுக இயக்குநர்கள் 3.00 மணி நேரத்திற்கு மேலாக ஒரு படத்தை இயக்குகிறார்கள்.
அது ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தும். பொதுவாக திரைப்படங்கள் பொழுதுபோக்கு படமாக இருக்க வேண்டும். ஆதலால் திரைப்படத்தை 2.30 மணி நேரத்திற்குள்ளாகவே எடுக்கவேண்டும். மேலும் இந்த நேரத்தில் வைரமுத்து, மகத், சூரி, இமான் உள்ளிட்ட எல்லோருக்கும் என் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி