செய்திகள்,திரையுலகம் தலைவன் (2014) திரை விமர்சனம்…

தலைவன் (2014) திரை விமர்சனம்…

தலைவன் (2014) திரை விமர்சனம்… post thumbnail image
ஊட்டியில் தனது தாய், தந்தை, தங்கையுடன் வாழ்ந்து வருகிறார் பாஸ். இவருடைய அப்பா ஜெயபிரகாஷ் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், பிரபல ரவுடியான வின்சென்ட் அசோகன் போலீஸ் தாக்குதலில் குண்டடிபட, அவனைக் காப்பாற்றினால் தங்களுக்கு நிறைய பணம் கிடைக்கும் என்ற ஆசையில், போலீஸ் அதிகாரிகள் இருவர் அவரை காப்பாற்ற முயற்சிக்கிறார்கள்.

அதன்படி ஜெயப்பிரகாஷை தங்களது இடத்திற்கு வரவழைத்து, அவருக்கு சிகிச்சை கொடுத்து காப்பாற்றுகின்றனர். இந்நிலையில் ஒருநாள் ரவுடி வின்சென்ட் அசோகனின் செல்போன் சாலையின் நடுவே கிடக்கிறது. அது நாயகன் பாஸ் கைக்கு கிடைக்கிறது.முக்கியமான புள்ளிகளின் தகவல்கள் அடங்கிய அந்த செல்போனுக்கு போன் செய்யும் நியாயமற்ற போலீஸ் அதிகாரிகள், அந்த போன் பாஸிடம் இருப்பதை அறிந்து அவரை மிரட்டுகின்றனர். அதை எப்படியாவது தங்களிடம் ஒப்படைக்குமாறு கூறுகின்றனர். அது தவறான ஒருவரின் செல்போன் என்பது அப்போது பாஸுக்கு தெரியவருகிறது.
அதனால், அந்த போனை நேர்மையான அதிகாரியிடம் ஒப்படைக்கவேண்டும் என்று பாஸ் முடிவெடுக்கிறார். இந்நிலையில், பாஸின் குடும்ப விவரங்களை அறிந்துகொண்ட நியாயமற்ற போலீஸ் அதிகாரிகள் அவரது அப்பா, அம்மா, தங்கையை கடத்தி கொண்டு போய்விடுகின்றனர். அந்த போனை தங்களிடம் ஒப்படைத்தால் குடும்பத்தை விட்டுவிடுகிறோம் என்று பாஸை மிரட்டுகிறார்கள்.இதற்கிடையில், அவரது தங்கையை கற்பழித்து கொலையும் செய்துவிடுகிறார்கள். போனை கொடுத்துவிட்டு தந்தை மற்றும் தாயை மீட்டு வரும் வழியில் காரில் குண்டு வெடித்து அவரது இருவரும் இறக்க, பாஸ் மற்றும் தப்பிக்கிறார்.

குடும்பத்தில் உள்ள அனைவரையும் பறிகொடுத்த நிலையில், தன் குடும்பத்தை சீரழித்தவர்களை பழிவாங்கத் துடிக்கிறார் பாஸ். அவர்களை எப்படி பழிவாங்கினார் என்பதே படத்தின் மீதிக்கதை.படத்தின் நாயகனான பாஸ் ஒரு கமர்ஷியல் ஹீரோவுக்குண்டான அத்தனை விதமான உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். படத்தில் காமெடி, நடனம், ஆக்ஷன் என எல்லாவற்றிலும் ஓரளவு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நடிப்பில் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் நாயகனாக வலம் வர வாய்ப்புகள் ஏராளம்.நாயகி நேகா பட்டேலுக்கு முதல் பாதியிலேயே நடிக்க வாய்ப்பு. கிடைத்த வாய்ப்பை சிறப்பாக செய்திருக்கிறார். கம்பவுண்டராக வரும் சந்தானம் ஒருசில காட்சிகளே வந்தாலும் கலகலக்க வைக்கிறார். மேலும், கோவை சரளா, வி.டி.வி.கணேஷ், மனோபாலா என காமெடி பட்டாளங்கள் ஆங்காங்கே பளிச்சிட்டாலும் அவர்களது காமெடியை ரசிக்க முடியவில்லை.

போலீஸ் உயர் அதிகாரியாக வரும் சுமன் மற்றும் வில்லன் போலீஸ்காரர்களும் மிரட்டுகிறார்கள். ரவுடியாக வரும் வின்சென்ட் அசோகன் பார்வையிலேயே பயத்தை வரவழைக்கிறார்.வித்யாசாகர் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். எஸ்.கே.பூபதி ஒளிப்பதிவில் சேசிங் காட்சிகள் அபாராம். பாடல் காட்சிகளை படமாக்கிய விதமும் அருமை.இயக்குனர் ரமேஷ் செல்வன் தமிழ் சினிமாவில் அதர பழசான கதையை புதுமையான முறையில் சொல்ல முன்வந்திருக்கிறார். ஆனால், திரைக்கதையில்தான் கொஞ்சம் தடுமாறியிருக்கிறார். படத்தில் ஏகப்பட்ட நடிகர்களை நடிக்க வைத்து கதையில் கோட்டைவிட்டு விட்டார். அதில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் படம் சூப்பராக வந்திருக்கும்.

மொத்தத்தில் ‘தலைவன்’ போராளி….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி