மதுரை:-மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமியை ஆதரித்து மு.க.ஸ்டாலின் மதுரையில் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார்.
இரவு 7 மணிக்கு சுப்பிரமணியபுரம் பகுதியில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது அவரது பிரசார வேனில் திடீரென ஒரு கல் வந்து விழுந்தது. இதனால் கூட்டத்தில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தை முடித்துவிட்டு புறப்பட்டு சென்றுவிட்டார். வேன் மீது கல் வீசியதாக பழங்காநத்தம் ஆர்.சி. தெருவை சேர்ந்த செந்தில் (வயது30) என்பவரை அப்பகுதியில் நின்றிருந்த தி.மு.க.வினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.செந்தில் மு.க.அழகிரியின் ஆதரவாளர் என்பது தெரியவந்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி