செய்திகள்,திரையுலகம் தொடர் வழிப்பறி செய்த நடிகை த்ரிஷாவின் கார் டிரைவர் கைது!…

தொடர் வழிப்பறி செய்த நடிகை த்ரிஷாவின் கார் டிரைவர் கைது!…

தொடர் வழிப்பறி செய்த நடிகை த்ரிஷாவின் கார் டிரைவர் கைது!… post thumbnail image
தாம்பரம்:-தாம்பரம், சேலையூர், சிட்லபாக்கம் பீர்க்கன்காரணை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து செல்லும் பெண்களிடம் தொடர் வழிப்பறி அடிக்கடி நடந்தது. வழிப்பறி ஆசாமிகளை பிடிக்க எஸ்ஐக்கள் ராஜி, ரவிக்குமார், வேணுகோபால் மற்றும் போலீஸ்காரர்கள் அருண், ராஜசேகர், கமல்ராஜ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினரும், சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசாரும், அதிகளவு நகை பறிப்பு சம்பவம் நடந்த பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். சேலையூர், மாடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பைக்கில் சென்ற வாலிபர்கள் நிற்காமல் சென்றனர். அந்த பைக் எண்ணை போலீசார் குறித்து கொண்டனர்.

இதையடுத்து வழிப்பறி சம்பவங்கள் நடந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என போலீசார் விசாரித்தனர். அப்போது, மாடம்பாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வைக்கப்பட்டுள்ள கேமராவில், போலீசார் ஆய்வு செய்தனர். அதில், தப்பியோடிய பைக் பதிவாகி இருந்தது. நம்பரை வைத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தியதில், பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் மேட்டு தெருவை சேர்ந்த குமார் (26) என்பவரின் பைக் என்று தெரிந்தது. இதையடுத்து, போலீசார் குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர். அதில் கிடைத்த தகவல்கள் விவரம்:

குமார், நடிகை திரிஷாவின் கார் டிரைவராக வேலை பார்க்கிறார். இவருக்கும் கல்லூரி மாணவர்களான மாடம்பாக்கம் ஏபிஎன் நகரை சேர்ந்த விவேக் (19), சேலையூர் பாரத் நகர் ராஜிவ்காந்தி தெருவை சேர்ந்த சேர்ந்த விக்னேஷ் (19) ஆகியோருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.திரிஷா படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கு நண்பர்களை குமார் அழைத்து சென்றுள்ளார். துணை நடிகைகளை பார்த்ததும், அவர்களுடன் ஜாலியாக இருக்க வேண்டும் என விவேக், விக்னேஷ் ஆகியோர் குமாரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, குமார் உள்பட 3 பேரும், சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் வழிப்பறி செய்து பணம் சேர்க்க முடிவு செய்தனர். அதன்படி, தாம்பரம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். அந்த நகைகளை விற்றும், அடகு வைத்தும் பணம் வாங்கி உள்ளனர். இதுவரை 10க்கும் மேற்பட்ட வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என விசாரணையில் தெரியவந்தாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் 30 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து குமார், விக்னேஷ், விவேக் ஆகியோரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி