இம்முறை நிறைய வீரர்கள் அணி மாறிய போதும், கேப்டன் ரோகித் சர்மா, அம்பதி ராயுடு, போலார்டு, மலிங்கா, ஹர்பஜன், பிரக்யான் ஓஜா உள்ளிட்டோர் இங்கு தான் உள்ளனர்.
புதிய வரவாக வந்துள்ள மைக் ஹசி, கடந்த தொடரில் (17 போட்டி, 733 ரன்கள்) அதிக ரன்கள் குவித்தவர். ரூ. 5 கோடிக்கு வாங்கப்பட்ட இவர், ரோகித் சர்மாவுடன் இணைந்து அணிக்கு நல்ல துவக்கம் தர காத்திருக்கிறார்.பின் வரிசையில் வரும் கோரி ஆண்டர்சன், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 36 பந்தில் சதம் அடித்தவர். இவர் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
பவுலிங்கை பொறுத்தவரையில் கடந்த தொடரில் மிரட்டிய மிட்சல் ஜான்சன், பஞ்சாப் அணிக்கு சென்று விட்டதால், இம்முறை வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவை மட்டும் நம்பியுள்ளது.இவருக்கு ஜாகிர் கான் கைகொடுப்பார் என நம்பலாம். சுழலில் ஹர்பஜன் சிங், பிரக்யான் ஓஜா அனுபவம் கைகொடுக்கும்.
கோல்கட்டா அணியில் கேப்டன் காம்பிர், காலிஸ், உத்தப்பா, யூசுப் பதான், சாகிப் அல் ஹசன் என, சிறப்பான பேட்ஸ்மேன்கள் பலர் உள்ளனர்.பவுலிங்கில், சுழல் மாயாவி சுனில் நரைன், பியுஸ் சாவ்லா உள்ளது பலம் தான். வேகப்பந்து வீச்சில் மார்னே மார்கல், உமேஷ் யாதவ், ரஞ்சிக் கோப்பை தொடரில் அசத்திய வினய் குமார் உள்ளனர்.இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி