சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘கத்தி’ படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். சமந்தா, நீல் நிதின் முகேஷ் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைக்கும் இப்படத்தினை ஐங்கரன் நிறுவனத்தோடு இணைந்து லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்நிலையில், எம்.ஜி.ஆர் நடிப்பில் மாபெரும் வரவேற்பை பெற்ற ‘எங்க வீட்டு பிள்ளை‘ படத்தில்,எம்.ஜி.ஆர் நடித்த வேடத்தில் விஜய்யை நடிக்க வைத்து இயக்கத் திட்டமிட்டு இருக்கிறார் இயக்குநர் செல்வபாரதி.
இது தொடர்பாக விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தற்போது ‘கத்தி’, சிம்புதேவன் படம் என வரிசையாக படங்களை ஒப்புக்கொண்டிருக்கும் விஜய், இப்படத்திற்கு எப்போது தேதிகள் ஒதுக்க இருக்கிறார் என்பது விரைவில் தெரியவரும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி