செய்திகள்,திரையுலகம் ஜாக்கிசானுடன் மோதும் ‘கோச்சடையான்’!…

ஜாக்கிசானுடன் மோதும் ‘கோச்சடையான்’!…

ஜாக்கிசானுடன் மோதும் ‘கோச்சடையான்’!… post thumbnail image
சென்னை:-ரஜினி நடித்துள்ள ‘கோச்சடையான்’ படம் மே 9mதேதி திரைக்கு வருவது உறுதியாகியிருக்கிறது. இந்திய அளவில் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவான முதல் படம்.

அதோடு, 125 கோடி பட்ஜெட்டில் 9 மொழிகளில் தயாராகியுள்ள இந்த படத்தை உலகமெங்கிலும் வெளியிடுகிறார்கள். அதனால் முக்கியத்துவம் வாய்ந்த தியேட்டர்களை கைப்பற்றும் பணி தீவிரமடைந்திருக்கிறது.கோச்சடையானுக்காக 4000 தியேட்டர்கள் தயார் நிலையில் உள்ளதாம். இந்த எண்ணிக்கை ஜாக்கிசான் நடிக்கும் படங்கள் வெளியாகும் தியேட்டர்களை விட அதிகமாம்.

அதனால் இப்படம் உலக அளவிலான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தால் அடுத்து ரஜினியும், ஜாக்கிசான் போன்று ஒரு உலக நடிகராகி விடுவார் என்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி