போகும் வழியில் லோனுக்காக வங்கியில் அடகு வைத்துள்ள சான்றிதழ்களை வாங்கிச் செல்கிறார். வங்கிக்கு செல்லும் ஹரிஷ், அங்கு மேனேஜரிடம் மோதலில் ஈடுபடுகிறார். தனக்கு அவசரமாக தேவை என்பதால் அவரை மாலை 5 மணிக்கு வர சொல்கிறார் மேனேஜர். அங்கேயே தங்கியிருந்து மாலை 5 மணிக்கு சான்றிதழ்களை வாங்கி அங்கிருந்து புறப்படுகிறார். திருச்சி பஸ்சில் ஏறும் ஹரிஷ், செல்லும் வழியில் பஸ் நிற்கும்போது சாப்பிட இறங்குகிறார். இதனால் பஸ்சை தவற விடுகிறார். பஸ்சில் தான் கொண்டு வந்த பை மற்றும் சான்றிதழ்களையும் தவற விடுகிறார்.தவற விட்ட பஸ்சை தேடி அலையும் ஹரிஷ், தன் பை மற்றும் சான்றிதழ்கள் போலீஸ் நிலையத்தில் இருப்பதை அறிந்து அங்கு செல்கிறார். அங்கு எஸ்.ஐ. இல்லாததால் காத்திருக்க சொல்கிறார்கள். பிறகு போலீஸ் அதிகாரி வந்தவுடன் அதை வாங்கி புறப்படுகிறார். ஒருபக்கம் நேரம் ஆகிக் கொண்டே இருப்பதால் தாய் மாமா போன் செய்து சீக்கிரமாக வர சொல்கிறார். பிறகு மாமாவின் அறிவுரைப்படி பெரம்பலூரில் இறங்கி சென்னை பஸ்சில் ஏற முடிவு செய்கிறார். ஆனால், கண்டக்டருடன் ஏற்பட்ட பிரச்சினையால் பெரம்பலூரில் இறங்க முடியாமால் போகிறது.
இப்படி பல்வேறு காரணங்களால் குறிப்பிட்ட 7 மணிக்குள் மாமா சொல்லும் வேலைக்கு செல்ல முடியாமல் போகிறது. இதனால் தன்னை ராசி இல்லாதவன் என்று நினைக்கிறார் ஹரிஷ். இதற்குமுன் வேலைப் பார்த்த இடங்களிலும் நேரம் சரியில்லாத காரணத்தால் வேலையை இழக்க நேரிடுகிறது. இதற்கிடையில், சரியான வேலை இல்லாத காரணத்தால் காதலையும் இழக்க நேரிடுகிறது.இறுதியில் ஹரிஷ் தன்னம்பிக்கை மூலம் சரியான வேலை அமைந்ததா? காதலியுடன் சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.படத்தில் நாயகன் ஹரிசுக்கு நடிக்க அதிக வாய்ப்பு. அதை திறம்பட செய்ய முயற்சி செய்திருக்கிறார். நாயகி ஆலீசாவிற்கு நடிக்க வாய்ப்பு குறைவு. படம் முழுக்க ஹரிசை சுற்றியே திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் லெபின். நல்ல கதையை எடுத்துக் கொண்ட இயக்குனர், அதை எப்படி கையாள்வது என்று தெரியாமல் தடுமாறியிருக்கிறார். சொல்ல வருவதை கொஞ்சம் தெளிவாக சொல்லியிருந்தால் படம் இன்னும் ரசிக்கும்படியாக இருந்திருக்கும். திரைக்கதையில் வலுவே இல்லாமல் இருக்கிறது. குறிப்பாக, வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட பிளாஷ்பேக் காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.
பாடல்கள் காட்சிகளுக்கு பொருந்தாமல் இருக்கிறது. இசையிலும், ஒளிப்பதிவிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் ‘ஆண்டவா காப்பாத்து’ நல்ல படம்…..
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி