லாஸ்வேகாஸ்:-அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன் இவரது மனைவி ஹிலாரி கிளிண்டன். இவர் தற்போதைய அதிபர் ஒபாமா மந்திரி சபையில் வெளியுறவு துறை அமைச்சராக இருந்தார்.தற்போது அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சொற்பொழி வாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று லாஸ்வேகாஸ் நகரில் நடந்த ஒரு நிறுவன விழாவில் பங்கேற்று பேசிக் கொண்டிருந்தார்.
அதில், 1000–க்கும் மேற்பட்டவர்கள் கூடி இருந்தனர். அப்போது அவரை நோக்கி யாரோ ஒருவர் ‘ஷு’வை வீசி எறிந்தார். தன்னை நோக்கி அது பறந்து வந்ததை பார்த்த ஹிலாரி புத்திசாலிதனமாக குனிந்து கொண்டார்.எனவே, அந்த ‘ஷு’ அவர் மீது விழவில்லை. கருப்பு மற்றும் ஆரஞ்ச் நிறத்தில் இது இருந்தது. ‘ஷு’வுடன் சேர்த்து சில பேப்பர்கள் பந்து போல் சுருட்டப்பட்டு வீசப்பட்டன.இதற்கிடையே, ‘ஷு’ வீசி விட்டு பின்பக்க வரிசையில் இருந்து ஒரு பெண் அவசரமாக வெளியேறினார். எனவே, அவரை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் அவரது பெயர் இலென் ரோசன் என தெரிய வந்தது. டென்வர் நகரை சேர்ந்தவர் என தெரிய வந்தது. அவர் எதற்காக ஹிலாரி மீது ‘ஷு’ வீசினார் என தெரியவில்லை.அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே தன் மீது ‘ஷு’ வீசப்பட்டதை ஹிலாரி கிளிண்டன் சர்வ சாதாரணமாக எடுத்து கொண்டார்.‘ஷு’ வீசிய பிறகும் தொடர்ந்து பேசிய அவர். ‘‘யாரோ என் மீது ஏதோ வீசினார்கள். கழிவுகள் எதையும் விசவில்லை. அது எனது நல்ல நேரம் என்று தான் சொல்ல வேண்டும். அவர் என்மீது ‘சாப்ட்பால்’ போன்று எதையும் வீசி விளையாடவில்லை ஜோக் அடித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
Like this:
Like Loading...
தொடர்புடையவை:-

வாஷிங்டன்:-2016-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஹிலாரி கிளிண்டன் முடிவு செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளார். தற்போது அதிபராக இருக்கும் ஒபாமாவின் பதவிகாலம் அடுத்த ஆண்டோடு முடிகிறது. அமெரிக்காவில் ஒருவர் இருமுறைக்கு மேல் அதிபராக இருக்க முடியாது என்பதால் ஒபாமா திரும்பவும் போட்டியிட முடியாது. கட்சியில் ஒபாமா அடுத்து அதிக செல்வாக்குடன் இருக்கும் முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், அமெரிக்காவின் முன்னாள் வெளிவுறவு மந்திரிமான ஹிலாரி கிளிண்டன்…

இண்டியனோலா:-அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவு மந்திரியுமான ஹிலாரி கிளிண்டன் ஆளும் ஜனநாயக கட்சியில் முக்கியத் தலைவராக உள்ளார். அவர் 2016-ம் ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஆர்வம் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. நேற்று, அமெரிக்காவின் அயோவா மாகாணத்தின் டெஸ் மோய்னஸ் நகரில் நடந்த ஜனநாயக கட்சி பிரசார கூட்டத்தில் ஹிலாரி கிளிண்டன் பேசினார். அவரது பேச்சைக் கேட்பதற்கு 6 ஆயிரத்துக்கும்…

லாஸ் ஏஞ்சல்ஸ்:-முன்னாள் அமெரிக்க அதிபர் பில்கிளிண்டன் கடந்த வியாழக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ஒரு விழாவில் நிவாடா என்ற பகுதியை சேர்ந்த இரண்டு பாலியல் தொழிலாளி பெண்களுடன் இணைந்து இருந்ததை அமெரிக்க ஊடக நிருபர் ஒருவர் புகைப்படம் எடுத்து அதை தன்னுடைய பத்திரிகையில் வெளியிட்டார். பாலியல் தொழிலாளிகளுடன் கிளிண்டன் இருந்த புகைப்படத்தால் அமெரிக்காவில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அவா அடோரா மற்றும் பர்பி கேர்ள், ஆகிய இரண்டு பெண்களும்,…