செய்திகள் பாலியல் தொழிலாளிகளுடன் முன்னாள் அமெரிக்க அதிபர்!…

பாலியல் தொழிலாளிகளுடன் முன்னாள் அமெரிக்க அதிபர்!…

பாலியல் தொழிலாளிகளுடன் முன்னாள் அமெரிக்க அதிபர்!… post thumbnail image
லாஸ் ஏஞ்சல்ஸ்:-முன்னாள் அமெரிக்க அதிபர் பில்கிளிண்டன் கடந்த வியாழக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ஒரு விழாவில் நிவாடா என்ற பகுதியை சேர்ந்த இரண்டு பாலியல் தொழிலாளி பெண்களுடன் இணைந்து இருந்ததை அமெரிக்க ஊடக நிருபர் ஒருவர் புகைப்படம் எடுத்து அதை தன்னுடைய பத்திரிகையில் வெளியிட்டார். பாலியல் தொழிலாளிகளுடன் கிளிண்டன் இருந்த புகைப்படத்தால் அமெரிக்காவில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அவா அடோரா மற்றும் பர்பி கேர்ள், ஆகிய இரண்டு பெண்களும், கார்சன் சிட்டி அருகேயுள்ள பண்ணி ராஞ்ச் ப்ரோதேள் என்ற இடத்தில் பாலியல் தொழில் செய்யும் பெண்கள் என ஊடகங்களால் அடையாளம் காண்பிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அன்றையதினம்தான் முதலில் கிளிண்டனை சந்தித்தார்களா? அல்லது கிளிண்டன் அவர்களுக்கு வழக்கமான வாடிக்கையாளரா? என்கிற ரீதியில் ஊடகங்கள் சந்தேகத்தை கிளப்பியுள்ளன.

ஏற்கனவே கிளிண்டன் அமெரிக்க அதிபராக இருந்தபோது மோனிகா லெவின்ஸ்கி என்ற பெண்ணுடன் வெள்ளை மாளிகையில் பாலியல் உறவு வைத்திருந்ததாக சர்ச்சையில் சிக்கியவர். தற்போது மற்றுமொரு பாலியல் சர்ச்சையில் சிக்கியுள்ளார். கிளிண்டனின் இந்த புகைப்படம் வெளியானதால் அவரது மனைவி ஹிலாரி கிளிண்டன் கடும் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி