தனியாக வீட்டில் இருந்த ஸ்ருதியை சில மாதங்களுக்கு முன் மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்து தாக்க முயன்ற சம்பவமும் நடந்தது. முன்னதாக நடிகர் சித்தார்த்துடன் அவர் நெருக்கமாக பழகுவதாக இணைய தளங்களில் பரபரப்பாக தகவல் வெளியானது.இந்நிலையில் நாகார்ஜூன் மகனும், டோலிவுட் நடிகருமான நாக சைதன்யாவை ஸ்ருதி ரகசியமாக காதலித்து வந்தார் என்று திரையுலகில் பேசப்பட்டது.
தங்களின் உறவுபற்றி வெளிப்படையாக காட்டிக்கொள்ளாமல் இருவரும் பல்வேறு இடங்களுக்கு சுற்றி திரிந்தனர். இந்நிலையில் இந்த ஜோடி திடீரென்று பிரிந்துவிட்டதாக டோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த பிரிவை இருவருமே அமைதியாக பேசி ஏற்றுக் கொண்டார்களாம்.இவர்களின் காதல் விவகாரம் இப்போதுதான் அம்பலமாகியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி