பலர் போட்டி போட்டு ஏலம் கேட்டனர். முடிவில் சீனாவை சேர்ந்த 50 வயது கோடீஸ்வரர் லியூ யுகியூயான் என்பவர் ஏலம் எடுத்தார்.அதன் மதிப்பு எவ்வளவு என்று தெரியுமா? 216 கோடி ரூபாய். இதன்மூலம் இதற்கு முன்பு இங்கு நடந்த அனைத்து ஏலத்தையும் இது முறியடித்துள்ளது.ஏலத்தில் சாதனை படைத்துள்ள இந்த கப் கடந்த 1465 முதல் 1487–ம் ஆண்டு வரை பயன்படுத்தியதாகும். அதாவது இது 550 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது.
வெள்ளை நிறத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடியது. அதில் கோழியும், சேவலும் தங்களது குஞ்சுகளுடன் சற்றித்திரிவது போன்று ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.இந்த கப் சீன கலையின் தெய்வீக தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது என கோத்பீ ஏல மையத்தின் துணைத் தலைவர் நிகோலஸ் சோவ் தெரிவித்துள்ளார். கப்பை அதிக விலை கொடுத்து ஏலம் எடுத்துள்ள லியூ சீன கோடீசுவரர்களில் ஒருவர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி