மும்பை:-நடிகர், நடிகைகள் பலர் தேர்தலில் பங்கெடுத்து வருகிறார்கள். கமல்ஹாசன், தேர்தல் கமிஷன் விளம்பர படத்தில் பங்கேற்று நடித்தார். வாக்காளர்கள் கண்டிப்பாக ஓட்டு போடவேண்டும் என்றும் ஓட்டுக்கு பணம் வாங்ககூடாது என்றும் வலியுறுத்தினார்.
நடிகர் மாதவனும் இதே கருத்தை வெளியிட்டுள்ளார்.மும்பையில் அவரிடம் தேர்தல் குறித்து கேட்டபோது, இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் தேர்தலில் ஜனநாயக கடமை உள்ளது. நமது நாட்டை நேசிக்க வேண்டும்.
அதற்காக கண்டிப்பாக எல்லோரும் ஓட்டு போட வேண்டும். நம் தேச வரலாற்றில் இது முக்கியமான தேர்தல் ஆகும். நாட்டை நேசித்தால் நிச்சயம் வாக்கை பதிவு செய்வார்கள்.இவ்வாறு மாதவன் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி