செய்திகள்,திரையுலகம் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார் நடிகை மனோரமா!…

ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார் நடிகை மனோரமா!…

ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார் நடிகை மனோரமா!… post thumbnail image
சென்னை:-பிரபல நகைச்சுவை நடிகை மனோரமா திடீர் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 30ம் தேதி, சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தார்கள்.

6 நாட்கள் அவர் தீவிர சிகிச்சை பிரிவிலேயே வைக்கப்பட்டு இருந்தார்.
மனோரமாவின் உடல்நிலை சீரானதும், சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். அதன்பிறகும் அவர் 2 நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார். அவர் பூரண குணம் அடைந்ததை தொடர்ந்து நேற்று ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி