செய்திகள்,திரையுலகம் அமர்க்களமாக நடந்த அஜித்,கௌதம் மேனன் பட பூஜை!…

அமர்க்களமாக நடந்த அஜித்,கௌதம் மேனன் பட பூஜை!…

அமர்க்களமாக நடந்த அஜித்,கௌதம் மேனன் பட பூஜை!… post thumbnail image
சென்னை:-கெளதம் மேனன் இயக்கும் அஜித் படத்தின் துவக்க விழா இன்று காலையில் நடந்தது. சென்னை வளசரவாக்கத்தில் ஏ.எம். ரத்னம் அலுவலகம் உள்ளது.

இதற்கு அருகிலுள்ள சாய்பாபா கோயிலில் அஜித்,கௌதம் மேனன் பட பூஜை அமர்க்களமாய் நடந்து முடிந்தது.ஸ்ரீ சத்யசாய் மூவீஸ் சார்பாக இப்படத்தைத் தயாரிக்கும் ஏ.எம்.ரத்னமும், கௌதம் மேனனும் பட பூஜையில் கலந்து கொண்டனர். ஆனால், அஜித் கலந்துகொள்ளவில்லை.போலீஸ் க்ரைம் த்ரில்லராக உருவாக இருக்கும் இப்படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை.

இந்நிலையில் 11ம் தேதி நடக்க இருக்கும் படப்பிடிப்பில் அஜித் கலந்துகொள்கிறார்.அஜித் டபுள் ரோலில் நடிப்பதால் படத்தின் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி