சென்னை:-கெளதம் மேனன் இயக்கும் அஜித் படத்தின் ஷூட்டிங் நாளை தொடங்குகிறது.இப்படத்தில் அனுஷ்கா ஹீரோயினாக நடிக்கிறார்.ஸ்ரீ சத்யசாய் மூவீஸ் சார்பாக ஏ.எம்.ரத்னம் இப்படத்தைத் தயாரிக்கிறார்.போலீஸ் க்ரைம் த்ரில்லராக உருவாக இருக்கும் இப்படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை.
அருண் விஜய் மற்றும் அரவிந்த் சாமி ஆகிய இருவரும் வில்லன்களாக நடிப்பார்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.இந்நிலையில் ‘அரவான்’ ஆதி இப்படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
இதில் இன்னொரு ஹீரோயினாக நடிப்பது யார். இசையமைப்பாளர் யார். என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.நாளை படத்தின் முதல் நாள் ஷூட்டிங் தொடங்க இருப்பதால் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி