தேர்தல் அறிக்கை குறித்து, அதன் அறிமுக உரையில் முரளிமனோகர் ஜோஷி பேசியதாவது: இந்த ‘தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டதன் மூலம், நாட்டிற்கு ஒரு புதிய துவக்கம் கிடைத்துள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து, ஏறக்குறைய ஒரு லட்சத்திற்கும் மேலான ஆலோசனைகள் பெறப்பட்டு, அதன் அடிப்படையில் இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள், ஆசிரியர்கள், தொழில் அதிபர்கள் என, பல தரப்பினர் ஆலோசனைகள் வழங்கினர். விலைவாசியை குறைக்க சிறப்பு திட்டங்கள் கூறப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, ஊழல் ஒழிப்பு, கறுப்பு பணம் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் தேர்தல் அறிக்கை அமைக்கப்பட்டுள்ளது. நீதித்துறை மற்றும் காவல்துறை சீர்திருத்தத்திற்கான அம்சங்கள் உள்ளன. சிறுபான்மையினர் பெண் குழந்தைகள் சிறந்த கல்வி பெறவும், வேலை வாய்ப்பு பெறவும் திட்டங்கள் கூறப்பட்டுள்ளன. இவ்வாறு ஜோஷி பேசினார்.தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள் :
* அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை
* வேலை வாய்ப்பு- கட்டமைப்புக்கு முக்கியத்துவம்
*பணவீக்கம்- விலைவாசி கட்டுப்படுத்த முதல் பணி
* பெண்களுக்கு அதிகாரம் – நகர்ப்புற வளர்ச்சிக்கு முன்னுரிமை
* இ முறையில் கல்வித்திட்டம்
*நவீன தொழில் நுட்பத்துடன் அனைத்து துறைகளும் மேம்படுத்தப்படும்
* திறம் வளர்க்க சிறப்பான திட்டங்கள்
*நேரடி முதலீடு அனுமதியில் சிறப்பு திட்டங்கள்
*சில்லரை வர்த்தகம் தவிர அனைத்து துறைகளிலும் அன்னிய முதலீட்டுக்கு வழி
*அன்னிய முதலீடு மூலம் வேலைவாய்ப்பு பெருக்க திட்டம்
*எளிய வரிவிதிப்பு நடைமுறை
*நாட்டின் வளர்ச்சி பணிகளுக்கு 8 வழிகள் வகுக்கப்பட்டுள்ளன
* வேளாண் சீர்திருத்தம்
*சிறுபான்மை நலன் பாதுகாப்பு
*மதரசாக்களை நவீனப்படுத்த திட்டம்
*கல்வி, வேலை வாய்ப்பில் சிறுபான்மையினருக்கு சலுகைகள்
*அனைத்து மாநிலங்களிலும் மகளிர் பாதுகாப்பு படை
*<உணவு பாதுகாப்பு திட்டம் மேலும் செம்மைப்படுத்தப்படும் *ஊழல் தடுப்பு , விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த புதிய கொள்கை *100 புதிய நகரங்கள், இரட்டை நகரங்கள், துணை நகரங்கள் *அனைவருக்கும் ஒரே சிவில் சட்டம் * சுகாதாரம் காத்திட முன்னுரிமைகள் *நாடு முழுவதும் ஒரே விற்பனை வரி *நிர்வாகம், நீதித்துறை, மறு சீரமைப்பு கொள்கை *வீட்டுக்கு குடிநீர் வயலுக்கு தண்ணீர் வழங்கும் புதிய திட்டம் *மத்திய - மாநில அரசு உறவுகள் பேணி காக்கப்படும் *பல்கலை., கழகம் மானியக்குழு மறு சீரமைப்பு *கடலேரா பகுதி வளர்ச்சிக்கு சாகர் மாலா திட்டம் *விளை பொருட்கள் கொண்டு செல்ல விவசாய அக்ரி ரயில் *நீதிதுறை, காவல் துறை, தேர்தல் கமிஷன் சீர்திருத்தம் *ஆண்- பெண் உரிமையில் சம நிலை *அயோத்தியில் அரசியல் சட்டத்திற்குட்பட்டு ராமர் கோயில் கட்டப்படும் *கிராமங்களில் வை-பை அறிமுகம்
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி