செய்திகள்,தொழில்நுட்பம் மாயமான மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து வரும் சிக்னல்!…

மாயமான மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து வரும் சிக்னல்!…

மாயமான மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து வரும் சிக்னல்!… post thumbnail image
பெர்த்:-மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு 239 பேருடன் கடந்த மாதம் 8ம் தேதி சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் திடீரென மாயமானது. சுமார் 14 நாடுகள் தெற்கு சீன கடல், தெற்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் கப்பல், விமானம், சாட்டிலைட் மூலமாக சல்லடை போட்டு தேடியும் விமானத்தின் ஒரு துண்டு கூட கிடைக்கவில்லை. இறுதியில் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து சுமார் 1850 கிமீ தொலைவில் கடலில் விழுந்து நொறுங்கி இருக்கலாம். அதில் சென்றவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று மலேசியா அரசு அறிவித்தது.

எனினும் தொடர்ந்து தேடுதல் பணி நடைபெறுகிறது. தற்போது ஆஸ்திரேலியா தலைமையில், பல்வேறு நாடுகள் விமானம் மற்றும் கப்பல் மூலமாக தேடி வருகின்றன.விமானத்துக்குள் என்ன நடந்தது என்பதை கறுப்பு பெட்டி மூலம் கண்டுபிடிக்கலாம். ஆனால் ஏப்ரல் 5ம் தேதி வரைதான் கறுப்பு பெட்டியில் இருந்து சிக்னல் கிடைக்கும். அதன் பிறகு அடங்கி விடும் என்று கூறப்பட்டது. மேலும் கடலுக்கு அடியில் இருக்கும் கறுப்பு பெட்டியை கண்டறியும் கருவியும் அமெரிக்கா வசமே உள்ளது. எனவே, அமெரிக்கா உதவியுடன் கடலுக்கு அடியில் கறுப்பு பெட்டியை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள சீன கப்பலுக்கு கறுப்பு பெட்டியில் இருந்து சிக்னல் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து ஆஸ்திரேலிய விமான படை தளபதி ஆங்கஸ் ஹூஸ்டன் கூறுகையில்,சீன கப்பலுக்கு சில எலக்ட்ரானிக் சிக்னல்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த சிக்னல் மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து வந்ததுதானா என்று உறுதி செய்யப்படவில்லை என்றார்.

இதுகுறித்து சீன இணையதளம் ஒன்றில் வெளியான செய்தியில், தெற்கு இந்திய பெருங்கடலில் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சீனாவின் ஹைசுன் 01 என்ற கப்பலுக்கு 37.5 கிலோஹெர்ட்ஸ் அளவுடைய எலக்ட்ரானிக் சிக்னல்கள் கிடைத்துள்ளன. அவை மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டியின் சிக்னல்களாக இருக்கலாம். கப்பல் நிலைநிறுத்தப்பட்டுள்ள இடத்தில் இருந்து சுமார் 90 கிமீ தொலைவில் கடலுக்கு அடியில் இருந்து அந்த சிக்னல்கள் கிடைத்துள்ளன என்று தெரிவித்துள்ளது. இதனால் விமானத்தை தேடும் பணியில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி