சென்னை:-விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் ‘கத்தி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். சிம்புதேவன் சொன்ன கதை விஜய்க்கு ரொம்ப பிடித்துப் போனதால் இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சிம்புதேவன் இயக்கத்தில் அருள்நிதி, பிந்துமாதவி, அஷ்ரிதா ஷெட்டி நடித்த ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ படம் வெளியாகியுள்ளது. இப்படத்தை நடிகர் விஜய்க்காக பிரத்தியேக காட்சியாக திரையிடப்பட்டது.
படத்தைப் பார்த்துவிட்டு விஜய், படத்தில் அருள்நிதியின் டைமிங் காமெடி பிடித்துள்ளதாகவும், படத்தின் காமெடிக் காட்சிகள் மற்றும் ஒரே கதையை மூன்று விதத் திரைக்கதையுடன் சொல்லப்பட்ட விதம் தனக்கு மிகவும் பிடித்திருப்பாதாகவும் கவர்ந்ததாகவும் சிம்பு தேவனிடம் விஜய் கூறினாராம். பின்னர் சிம்புதேவனுக்கும் படக்குழுவினருக்கும் பாராட்டு தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி