செய்திகள்,திரையுலகம் ஹாலிவுட் காமெடி நடிகர் ஜான் பினெட்டே மரணம்!…

ஹாலிவுட் காமெடி நடிகர் ஜான் பினெட்டே மரணம்!…

ஹாலிவுட் காமெடி நடிகர் ஜான் பினெட்டே மரணம்!… post thumbnail image
அமெரிக்கா:-ஹாலிவுட் காமெடி நடிகர் ஜான் பினெட்டே (50). இவர் அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். வருகிற ஜூன் மாதம் தனது சுற்றுப்பயணத்தை முடிக்க திட்டமிட்டிருந்தார்.

பயணத்தின்போது அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் பிட்ஸ்பர்க் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார்.இந்நிலையில் அங்கு அவர் தனது அறையில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி பிரேத பரிசோதனை செய்தனர்.

அப்போது அவர் கல்லீரல் மற்றும் இருதய நோயினால் அவதிப்பட்டு வந்தது தெரியவந்தது.ஜான் பினெட்டே அமெரிக்காவில் மசாசுசெட்ஸ் மாகாணத்தில் உள்ள பாஸ்டன் நகரில் பிறந்தவர். இவர் பல விருதுகளை பெற்றுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி