செய்திகள்,தொழில்நுட்பம் விண்டோஸ் 8.1-ல் மீண்டும் ஸ்டார்ட் மெனு இணைப்பு!…

விண்டோஸ் 8.1-ல் மீண்டும் ஸ்டார்ட் மெனு இணைப்பு!…

விண்டோஸ் 8.1-ல் மீண்டும் ஸ்டார்ட் மெனு இணைப்பு!… post thumbnail image
சான்பிரான்சிஸ்கோ:-அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் தகவல் தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமான டெவலப்பர் கருத்தரங்கு புதன்கிழமை துவங்கியது. இதில் அந்நிறுவனத்தின் புதிய பயன்பாடான விண்டோஸ் 8.1-ல் பயனர்களின் விருப்பத்திற்காக மீண்டும் ஸ்டார்ட் மெனு இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதுமட்டுமின்றி திரை பணிநிறுத்துவிண்டோஸ் 8.1-ல் மீண்டும் ஸ்டார்ட் மெனு இணைப்பு!…ம் பொத்தான், நவீன யுஐ பயன்பாடுகளை டாஸ்க்பாரில் இணைக்கும் வசதி போன்ற தொழில் நுட்பங்களும் இதில் இணைக்கப்படுவதால் கீபோர்ட் மற்றும் மவுசினை பயன்படுத்துவோருக்கு செயல்பாட்டுமுறை எளிதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.நேற்று அந்நிறுவனத்தால் செயல்படுத்திக் காட்டப்பட்ட ஸ்டார்ட் மெனு விண்டோஸ் 7-ன் செயல்திட்டத்தை ஒத்திருந்தது. இதனை இயக்குவதன் மூலம் கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ள பயன்பாடுகளையும், நவீன யுஐ பயன்பாடுகளையும் பெறமுடியும் என்பதை விளக்கிய மைக்ரோசாப்ட் ஸ்டார்ட் மெனு குறித்த வேலைகள் தொடர்ந்து கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டது.

எனவே வரும் 8-ம் தேதி வெளியிடப்படும் விண்டோஸ் 8.1-ல் இந்த வசதி இடம்பெறாது என்று தெரியவந்துள்ளது.சென்றமுறை இந்நிறுவனம் விண்டோஸ் 8 பயன்பாட்டை அறிமுகப்படுத்தியபோது டாப்லெட் உபயோகிப்பாளர்களுக்கான தீர்வாக அதனை வெளியிட்டது. ஆனால் அதன் செயல்பாட்டில் திருப்தியடையாத பெரும்பான்மையான உபயோகிப்பாளர்கள் தங்களின் தனிக் கணினியையே தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையை மாற்றவும் விண்டோஸ் 8-ஐ மேம்படுத்தவும் முயற்சி செய்துவருவதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி