புதுடெல்லி:-டெல்லியை சேர்ந்த போதைபொருள் கும்பல் தலைவன் ஹெராயின் மோசடி தொழிலில் பிரபல நடிகைகள் மாதுரி தீட்ஷித், ஸ்ரீதேவி,ராக்கி சாவந்த் ஆகியோரது பெயரை பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது.
நல்ல விலை போகும் உயர் தரமான ஹெராயின் போதை பொருளுக்கு , மாதுரி அல்லது ஸ்ரீதேவி பெயரிட்டு உள்ளனர்.குறைந்த விலை கிடைக்கும் தரம் குறைந்த போதை பொருளுக்கு ராக்கி சாவந்த் பெயரை வைத்து உள்ளனர்.ஒரு கிலோகிராம் எடை உள்ள மாதுரி ஹெராயின் விலை ரூ 12 லட்சம்.ஒரு கிலோகிராம் ஸ்ரீதேவி ஹெராயின் விலை ரூ. 8 லட்சம்.ராக்கி சாவந்த் ஹெராயின் மிக குறைந்த விலை போகும்.
தென் இந்திய சப்ளையர்களுக்காக டெல்லியில் உள்ள போதை மருந்து குமபல் இது போன்ற ரகசிய வார்த்தைகளை பயன்படுத்தி வருகின்றனர் என டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி