ஜெய்ப்பூர்:-ஜெய்ப்பூரை சேர்ந்தவர் விக்ரம் சிங் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர். விக்ரம் சிங் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் சேர்ந்து பல்வேறு இடங்களுக்கு சுற்றி திரிந்தனர். திடீர் என ஒரு நாள் விக்ரம் சிங்கின் காதலி ஜோதி நகர் போலீசில் ஒரு புகார் அளித்தார்.
அதில் விக்ரம் சிங் தனது நிர்வாண படத்தை பேஸ்புக்கில் அப்லோடு செய்து இருப்பதாக கூறி இருந்தார்.இதை தொடர்ந்து போலீசார் விக்ரம் சிங் வீட்டில் சோதனை நடத்தினர் அவரது பெற்றோர்களிடமும் விசாரணை நடத்தினர்.தன்னால் தனது பெற்றோரும் உறவினர்களையும் போலீசார் துன்புறுத்தி வருவதாக விகரம் சிங் மன வேதனை அடைந்தார்.
மேலும் தன்னிடமும் விசாரணை நடத்துவார்கள் என பயந்தார்.இதை தொடர்ந்து ஓடும் ரெயில் முன் பாய்ந்து விக்ரம் சிங் தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி