யாரையும் கொலை செய்யவோ அல்லது தாக்குதல் நடத்தவோ நான் இரக்கம் காட்ட மாட்டேன். மோடியை துண்டு, துண்டாக வெட்டி போட்டு விடுவேன்.குஜராத்தில் 4 சதவீத முஸ்லிம்களே உள்ளனர். ஆனால் உத்தரபிரதேசத்தில் 42 சதவீத முஸ்லிம்கள் உள்ளனர். மோடி இதை நினைவில் கொள்ள வேண்டும்’’ என்று பேசினார்.இம்ரான் மசூத்தின் இந்த பேச்சு நேற்று இணையத் தளங்களில் வெளியானது. தொலைக்காட்சி ஒன்றிலும் அவர் கொலை வெறியுடன் பேசுவது போன்ற காட்சி ஒளிபரப்பானது. இதனால் சர்ச்சை வெடித்தது.சகரன்பூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராகவ் லகன்பால் இதுபற்றி தேர்தல் கமிஷன் மற்றும் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து தேவ்பார்த் நகர போலீசார் இம்ரான் மசூத் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவின்கீழ் இரு தரப்பினரிடையே பகை உணர்வைத் தூண்டுதல், வன்முறை, மத உணர்வை தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுதல், மத நம்பிக்கைக்கு எதிராக வெறுப்பை ஏற்படுத்துதல், குற்றம் செய்யும் நோக்கத்துடன் கொலை மிரட்டல் விடுப்பது ஆகிய பிரிவுகளில் இம்ரான் மசூத் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. வன் கொடுமை தடுப்புச் சட்டமும் மசூத் மீது பாய்ந்தது.இதற்கிடயே மசூத் பேசும் வீடியோ பதிவு காட்சிகளை நேற்றிரவு தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது இம்ரான் மசூத் தேர்தல் நடத்தை விதிகளை மீறி இருப்பது உறுதியானது. இதையடுத்து இம்ரான் மசூத் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்க தேர்தல் கமிஷன் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.அதன் பேரில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை இம்ரான் மசூத்தை உத்தரபிர தேச மாநில போலீசார் கைது செய்தனர். பிறகு அவர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதற்கிடையே இம்ரான் மசூத்தின் விரும்பத்தகாத பேச்சால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். மசூத்தை தொடர்பு கொண்டு கண்டித்தனர். அதன் பிறகே மசூத்தன் தவறை உணர்ந்தார்.உடனடியாக அவர், ‘‘பிரசார கூட்டத்தில் நான் அவ்வாறு பேசி இருக்கக் கூடாது. என் வார்த்தைகளில் நான் மிகவும் கவனமாக இருந்திருக்க வேண்டும். என் பேச்சு யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நிபந்தனையற்ற மன்னிப்பை நான் கோருகிறேன்’’ என்றார்.உத்தரபிரதேசத்தில் தற்போது மோடி அலை வீசுகிறது. காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத்தின் பேச்சு, அதை அதிகரிக்க செய்யும் வகையில் அமைந்து விட்டதாக கருதப்படுகிறது.
இது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இன்று ராகுல்காந்தி சகரன்பூர் நகரில் நடக்கம் பொதுக்கூட்டத்தில் பேச ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இம்ரான் மசூத் பேச்சால் சர்ச்சை ஏற்பட்டுள்ளதால் ராகுல் சகரன்பூர் கூட்டத்தை ரத்து செய்து விட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி