ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படம் முதலில் ஏப்ரல் 11ம் தேதி வெளிவருவதாகத்தான் இருந்தது. ஆனால் விஷாலின் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்திற்கு முக்கிய தியேட்டர்கள் அனைத்தும் புக் ஆகிவிட்டதால், ரிலீஸ் தேதியை மாற்றிக்கொள்ள தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொண்டது.
காதல், காமெடி, மற்றும் விறுவிறுப்புடன் உள்ள கதையம்சம் கொண்ட இந்த படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக மீனாட்ஷி தீக்ஷித் என்ற புதுமுக நடிகை நடித்துள்ளார்.
இவர்களுடன் ராதாரவி, மனோபாலா, மன்சூர் அலிகான், சந்தான பாரதி, பாலாசிங் மற்றும் பலர் நடித்துள்ளனர். எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜி நடித்த பல படங்களுக்கு வசனம் எழுதிய பழம்பெரும் வசனகர்த்தா ஆரூர்தாஸ் இந்த படத்திற்கான வசனங்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல ஒளிப்பதிவாளர் ராம்நாத் ஷெட்டி இந்த படத்தின் கேமரானாக பணிபுரிந்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி