சென்னை:-மோகன்லால், மீனா நடித்த ‘திரிஷ்யம்’ மலையாள படம் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது. இந்த படம் ரிலீசான போதே அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடின. வெளி மாநிலங்களிலும் அமோக வரவேற்பை பெற்றது.
இதை வேறு மொழிகளில் ரீமேக் செய்ய போட்டா போட்டியும் நடந்தது. தமிழ் பதிப்பில் கமலஹாசன் நடிக்கிறார். திரிஷ்யம் படம் கேரளாவில் 60 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடி உள்ளது. அங்கு 100–வது நாள் விழா கொண்டாடப்பட்டது. அங்கு மட்டும் இந்த படம் ரூ.47 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
சென்னை, மும்பை, புனே, பெங்களூர், கோவை போன்ற பெரு நகரங்களில் நிறைய தியேட்டர்களில் திரையிடப்பட்டன. சென்னையில் 3 மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியது. வெளி நாடுகளில் இந்த படம் ரூ.4 கோடி வசூலித்து உள்ளது. இங்கிலாந்தில் மட்டும் ரூ.1 கோடி வசூலாகியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி