சென்னை:-கிரிக்கெட் சூதாட்ட விவகாரம் பூதாகரமான நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பதவி விலக வேண்டும் என பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் கேப்டன் பதவியில் இருந்து விலக தயாராக இருப்பதாக மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசனிடம் தொலைபேசி வாயிலாக நேற்று தோனி பேசியதாகவும் அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பு மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் பதவியில் இருந்தும் தான் பதவி விலக விரும்புவதாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி