சென்னை:-மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தயாரித்துள்ள ‘வடகறி‘ படத்தின் ஆடியோ வெளியீடு மிக விரைவில் நடைபெற உள்ளது. இந்த படத்தின் ஒரு பாடலுக்கு கனடா நாட்டின் ஆபாச நடிகை சன்னிலியோன் குத்து நடனம் ஆடியுள்ளதால் இந்த படத்தின் ஆடியோ உரிமையை இந்தியாவின் மிகப்பெரிய மியூசிக் நிறுவனங்கள் வாங்க போட்டியிட்டன.
ஆனால் தயாநிதி அழகிரி தான் சொந்தமாக தொடங்கியுள்ள மேனகா ஆடியோ என்ற நிறுவனத்தின் சார்பில் வடகறி படத்தின் ஆடியோவை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்.இந்த படத்தின் இசையமைப்பாளர்களாக விவேக் மற்றும் மெர்வின் என்ற இரட்டையர்கள் பணிபுரிந்துள்ளனர்.
இந்த படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொள்ள சன்னிலியோன் சம்மதம் தெரிவித்துள்ளார். அதற்காக அவர் கேட்ட ரூ.40 லட்சத்தை கொடுக்க தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி ஒப்புக்கொண்டதால் அடுத்த மாதம் சென்னையில் நடைபெற உள்ள வடகறி ஆடியோ விழாவுக்காக சன்னிலியோன் சென்னை வருகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி