மும்பை:-தமிழில் ஜெயம் ரவியுடன் தாம்தூம் உள்பட பல இந்தி படங்களில் நடித்தவர் நடிகை கங்கனா ரனவத்.இவர் மும்பையில் ஐரிஸ்கர் இன் ஹார் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புதிய வீடு வாங்கி உள்ளார்.
கங்கனா தனது வீட்டின் கட்டுமான பணிகள் முடிந்ததால் அந்த வீட்டில் கிரஹப்பிரவேசம் செய்து குடியேறினார்.குடியிருப்போருக்கான சான்றிதழும் அவருக்கு வழங்கப்பட்டது. குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பிக்கப்பட்டும் இதுவரை நகராட்சி நிர்வாகம் குடிநீர் இணைப்பு வழங்கவில்லை.
இதனால் கங்கனா வீட்டுக்கு குடிநீர் சப்ளை இல்லை. பாத்ரூமில் குளிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது.இதனால் கங்கனா தற்காலிகமாக தினமும் மினரல் வாட்டரில் குளிக்கிறார்.கட்டிடத்தில் வழக்கமான தண்ணீர் சப்ளை துவங்கும் வரை நடிகை குளியல் மினரல் வாட்டரை பயன்படுத்தி குளிப்பார் என தெரிகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி