சென்னை:-விஜய், சமந்தா நடிப்பில் ஏ,ஆர்,முருகதாஸ் இயக்கிக்கொண்டிருக்கும் படம் ‘கத்தி‘.இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது.
சமீபத்தில் இப்படத்திற்காக ஒரு பாடலை பதிவு செய்திருக்கிறார்கள். அப்பாடலை எழுதியிருக்கிறார் மதன் கார்க்கி.பாடல் அருமையாக வந்திருக்கிறது என தனது ட்விட்டர் பக்கத்தில் மதன் கார்க்கி கூறியுள்ளார். கார்க்கி இதற்கு முன் விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படத்திலும் கூகுள் கூகுள் என்ற பாடலை எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி