ஹாலிவுட்டில் அதிநவீன தொழில்நுட்பங்கள் கோலோச்சிக் கொண்டிருக்கிறது. இப்போது இந்தியாவில் முதல்முறையாக ‘போட்டோ ரியலிஸ்டிக் பெர்பாமன்ஸ் கேப்சரிங்’ என்ற தொழில்நுட்பத்தில் ‘கோச்சடையான்’ உருவாகியுள்ளது. நிஜத்தில் செய்ய முடியாத பல விஷயங்களை இதுபோன்ற படங்களில் செய்ய முடியும். ரசிகர்களை வியப்பில் ஆழ்த்த முடியும். இந்தப்படம் ரஜினியின் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தும்.
‘ப்ளட் ஸ்டோன்’ படத்துக்குப் பிறகு ‘ஜீன்ஸ்’ படத்தை தமிழில் தயாரித்தேன். ரஜினி எனது நண்பர். அவரை வைத்து மீண்டும் படம் தயாரிப்பதாக இருந்தால், அவருக்கு ஏற்ற கதை அமைய வேண்டும். அப்படி அமைந்தால், மீண்டும் அவரை வைத்து படம் தயாரிப்பேன்.என கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி