செய்திகள்,திரையுலகம் மாரடைப்பு காரணமாக பழம்பெரும் நடிகை மரணம்!…

மாரடைப்பு காரணமாக பழம்பெரும் நடிகை மரணம்!…

மாரடைப்பு காரணமாக பழம்பெரும் நடிகை மரணம்!… post thumbnail image
மும்பை:-பழம்பெரும் இந்தி நடிகை நந்தா மும்பை வெர்சோவாவில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்தார். நேற்று காலை 8.30 மணிக்கு திடீர் மாரடைப்பு காரணமாக அவர் மரணம் அடைந்தார். நந்தாவுக்கு வயது 75.நடிகை நந்தாவின் மரண செய்தி அறிந்ததும் ஏராளமான இந்தி நடிகர், நடிகைகள் அவரது வீட்டுக்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். அதன்பின்னர் இறுதி சடங்குகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து நடிகை நந்தாவின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

நடிகை நந்தா குழந்தை பருவத்திலேயே சினிமா துறையில் கால் பதித்தவர். தனது முதல் படமான ‘தூபன் அவுர் தியா’வில் தனது சொந்த மாமாவுடன் நடித்தார். இந்த படம் கடந்த 1956–ம் ஆண்டு வெளிவந்தது.அதன்பின்னர் நடிகை நந்தா ‘பாபி’, தேவ் ஆனந்தின் ‘கலாபசார்’ மற்றும் ‘தூல் கா பூல்’ ஆகிய திரைப்படங்களில் துணை கதாபாத்திர வேடத்தில் நடித்தார். இதனை தொடர்ந்து 1959–ம் ஆண்டில் வெளியான ‘சோட்டி பேஹன்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். இந்த படத்தில் தனது முழு திறமையையும் நிரூபித்த நந்தா, பட வெற்றியின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார்.

மேலும், அவரது நடிப்பில் வெளியான ‘அஞ்சால்’ திரைப்படம் வெற்றி பெற்றதன் மூலம் நடிகை நந்தாவுக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.நடிகை நந்தா திருமணம் ஆகாதவர். மும்பை வெர்சோவாவில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் அவர் வசித்து வந்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி