சாதாரண குடும்பத்தில் பிறந்து பல்வேறு நிலைகளில் பாடுபட்டு சினிமா துறையில் சாதனை படைத்த நடிகர் ரஜினிகாந்துக்கு எங்கள் அமைப்பு சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கி கவுரவித்துள்ளோம். இது தமிழகத்தில் நாங்கள் தேர்ந்தெடுத்து வழங்கும் முதலாவது வாழ்நாள் சாதனையாளர் விருது ஆகும்.
இதற்கான சான்றிதழை நேற்று முன்தினம் ரஜினிகாந்தின் வீட்டிற்கு சென்று வழங்கினோம். அங்கு ரஜினிகாந்த் இல்லாததால் அவருடைய மனைவி லதாவிடம் சான்றிதழை ஒப்படைத்தோம்.நடிகர் அமிதாப்பச்சனுக்கு எங்கள் அமைப்பு சார்பில் ஏற்கனவே விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சாதனை படைத்தவர்களை தேர்ந்தெடுத்து சாதனையாளர் விருது வழங்க முடிவெடுத்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி