ஹரி இயக்கும் படங்களுக்கு தெலுங்கிலும் வரவேற்பு இருப்பதால், தெலுங்கில் பிரபலமாக இருக்கும் நாயகியை ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டனர். ஸ்ருதிஹாசன், பவன் கல்யாணுடன் நடித்த ‘கப்பர் சிங்’படம் வெற்றி பெற்றதால், தற்போது ஸ்ருதிஹாசனுக்கு அங்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனவே, இப்படத்தில் நடிக்க அவரை அணுகியிருக்கிறார்கள். ஸ்ருதியும் தமிழில் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம்.
இது ஒரு ‘முக்கோண ஆக்ஷன் கதை’ என்கிறார் ஹரி.
ஹரி படங்களில் எப்போதும் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இருப்பார்கள். வழக்கம் போல் இப்படத்திலும், சத்யராஜ், ராதிகா, சித்தாரா, கௌசல்யா ஆகியோர் நடிக்க உள்ளனர். நகைச்சுவை பகுதிக்கு சூரியை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.ஏப்ரம் மாத இறுதியில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி