செய்திகள்,திரையுலகம் ‘கோச்சடையான்’ படம் வெற்றி பெற ஏப்ரல் 2ம் தேதி ரஜினி ரசிகர்கள் திருப்பதிக்கு பாத யாத்திரை!…

‘கோச்சடையான்’ படம் வெற்றி பெற ஏப்ரல் 2ம் தேதி ரஜினி ரசிகர்கள் திருப்பதிக்கு பாத யாத்திரை!…

‘கோச்சடையான்’ படம் வெற்றி பெற ஏப்ரல் 2ம் தேதி ரஜினி ரசிகர்கள் திருப்பதிக்கு பாத யாத்திரை!… post thumbnail image
சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்துள்ள கோச்சடையான் திரைப்படம் வெற்றி பெற வேண்டி, அவரது ரசிகர்கள் வரும் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி திருப்பதிக்கு பாதயாத்திரை செல்ல உள்ளனர்.இதுகுறித்து ஆந்திர மாநிலம் நெல்லூர் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற பொருளாளர் ரவி நிருபர்களிடம் கூறியதாவது:

இந்திய திரைப்பட உலகில் முதன்முறையாக போட்டோ , ரியலிஸ்டிக் 3டி அனிமேஷன் முறையில் எடுக்கப்பட்ட திரைப்படம் கோச்சடையான். இத்திரைப்படம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் 11-ம் தேதி வெளியாக உள்ளது. 2 ஆண்டுகளுக்கு பின்னர் ரஜினி நடித்து வெளிவர இருக்கும் இத்திரைப்படத்தை காண ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர்.

இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டியும் ரஜினி ஆரோக்கியத்துடன் வாழ வேண்டியும் ஏப்ரல் 2-ம் தேதி வேலூரிலிருந்து திருப்பதிக்கு பாத யாத்திரையாக செல்ல உள்ளோம்.என கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி