போட்டி ஒன்றில் பங்கேற்க நெதர்லாந்து நாட்டிற்கு சென்றிருந்த தீபிகா பல்லிகல், அங்குள்ள ராட்டர்டம் நகரின் ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார். ஓட்டல் கட்டணத்தை செலுத்துவதற்காக தனது டெபிட் கார்டை கொடுத்த போது, அவரது கணக்கில் பணம் இல்லை என்று ஓட்டல் ஊழியர்கள் தெரிவித்தனர்.ஓட்டல் கட்டணத் தொகையை காட்டிலும் தனது வங்கிக் கணக்கில் 10 மடங்கு அதிக தொகையை சேமித்து வைத்திருந்த தீபிகா, ஓட்டல் ஊழியர்களின் பதிலை கேட்டு அதிர்ச்சியடைந்தார்.
இது தொடர்பாக வங்கி அதிகாரிகளிடம் அவர் கேட்டபோது தொழில்நுட்ப குறைபாட்டை அவர்கள் காரணம் காட்டினர்.
இச்சம்பவம் நிகழ்ந்த சில நாட்கள் கழித்து, இந்திய அரசின் விளையாட்டுத் துறை அவருக்கு ஒரு லட்சம் ரூபாயை பரிசாக வழங்கியது. அந்த காசோலையை வங்கியில் போட்ட தீபிகா, அந்த காசோலைக்கான தொகை தனது கணக்கில் வரவாகிவிட்டதா? என்று சரிபார்த்த போது, அந்த காசோலை ‘ரிட்டர்ன்’ ஆகி விட்டதாக அந்த வங்கியின் அதிகாரிகள் தெரிவித்தனர்.இதனால் கொதிப்படைந்த தீபிகா, ஒழுங்கான சேவை வழங்க தவறியதால் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ‘ஆக்ஸிஸ் வங்கி’யின் சென்னை கிளை பத்து லட்சம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என்று சென்னை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நுகர்வோர் கோர்ட் நடுவர், ‘மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு சம்பந்தப்பட்ட வங்கி 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி