சென்னை:-அட்டகத்தி படத்தில் கானா பாலா பாடிய ஹிட் பாட்டு “ஆடி போனா ஆவணி, அவள் ஆளை மயக்கும் தாவணி…” இந்த பாட்டையே ஒரு படத்தின் டைட்டிலாக்கி விட்டார்கள்.ஸபா சினி ஆர்ட்ஸ் என்ற புதிய கம்பெனி தயாரிக்கும் இந்தப் படத்தை ஜே.எம். என்பவர் இயக்குகிறார். ஆதில், ஸ்ருதி படேல் என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.
ஆடி போனா ஆவணி என்று தலைப்பு வைத்திருப்பது கதைக்கு பொருத்தமாக இருப்பதால். நாளை நல்ல காலம் பொறக்கும் என்பதை சொல்லும் வாக்கியம் அது. ஒவ்வொரு இளைஞருக்கும் ஒரு தனித்திறமை இருக்கிறது. பலர் அதை அறியாமல் இருக்கிறார்கள்.
அறிந்த சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள். தனித் திறமை வாய்ந்த இளைஞர்கள் அதை நாட்டுக்கு பயன்படுத்தினால் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும் என்பதே படத்தில் நாங்கள் சொல்ல வருகிற மெசேஜ், சிவகங்கை, பரமக்குடி பகுதியில் படப்பிடிப்பு நடத்தியிருக்கோம். மலேசியா, தாய்லாந்தில் பாடல் காட்சிகளை படமாக்கி இருக்கிறோம்” என்கிறார் டைரக்டர் ஜெ.எம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி