இதனை எதிர்த்து முன்னாள் அதிபர் மோர்சியின் ஆதரவாளர்களான இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பை சேர்ந்தவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அவர்கள் மீது ராணுவம் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் பலர் மீது தேசத் துரோக குற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் எகிப்து நாட்டில் உள்ள பல் கோர்ட்டுகளில் வழக்கு நடைபெற்று வருகிறது. இவற்றில் ஒரு வழக்கில் தொடர்புடைய மோர்சியின் ஆதரவாளர்கள் 529 பேருக்கு மரண தண்டனை வழங்கி நீதிபதி இன்று உத்தரவிட்டார்.
இவர்களில் 153 பேர் விசாரணை கைதிகளாக தற்போது சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள், தப்பியோடிய தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மரண தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, தலைமறைவாக இருக்கும் 376 பேரையும் தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி