செய்திகள்,திரையுலகம் மாயமான மலேசிய விமானம் குறித்து கேலி செய்த அமிதாப், ரஜினிக்கு கண்டனம்!…

மாயமான மலேசிய விமானம் குறித்து கேலி செய்த அமிதாப், ரஜினிக்கு கண்டனம்!…

மாயமான மலேசிய விமானம் குறித்து கேலி செய்த அமிதாப், ரஜினிக்கு கண்டனம்!… post thumbnail image
மும்பை:-மலேசியா விமானம் MH370, கடந்த 8ஆம் தேதி மாயமாய் மறைந்து போனது முதல் உலகம் முழுவதும் பெரும் சோகத்தில் இருக்கிறது. உலக நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து பல மில்லியன் கணக்கான டாலர்கள் செலவழித்து மாயமான மலேசிய விமானத்தை இரவு பகலாக கஷ்டப்பட்டு தேடிக்கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் அமிதாப் தனது டுவிட்டரில் மலேசிய விமானம் குறித்து ரஜினியை ஒப்பிட்டு கேலி டுவிட் ஒன்று பதிவு செய்ததால் சமூக வலைத்தளங்களில் அமிதாப்புக்கும் ரஜினிகாந்த்துக்கும் கடும் கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.காணாமல் போன மலேசிய விமானம் குறித்து அமிதாப் பச்சன் தனது டுவிட்டர் தளத்தில் “OK Rajnikanth … enough is enough !! You win OK !! Now tell us where that plane is ..” என்று பதிவு செய்துள்ளார். இந்த டுவிட்டை பார்த்து ஒரு சிலர் நல்ல நகைச்சுவை என்று கமெண்ட் அளித்துள்ளனர். ஆனால் பெரும்பாலான டுவிட்டர் பயனாளிகள் ரஜினிகாந்த்தையும், அமிதாப்பையும் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

239 உயிர்களுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் அவர்களுடைய உறவினர்கள் கடந்த 15 நாட்களாக பதட்டத்தில் இருக்கும் நிலையில் அவர்களுடைய பரிதவிப்பு இந்த இரண்டு சூப்பர் ஸ்டார்களுக்கு ஒரு கேலியாக தெரிகிறதா? என பலர் கமெண்ட் அளித்து வருகின்றனர். இதனால் டுவிட்டரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி