இந்நிலையில் நடிகர் பவன்கல்யாண் நேற்று ஆமதாபாத் சென்று பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை சந்தித்து பேசினார். பின்னர் அவர் கூறும் போது, ‘‘நாடு இருக்கும் சூழலில் நரேந்திரமோடி பிரதமராக வேண்டியது அவசியம்’’ என்றார். இது பாரதீய ஜனதா கட்சியினருக்கு உற்சாகம் அளித்து உள்ளது.இதன் மூலம் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியை பாரதீய ஜனதா கூட்டணியில் வர வாய்ப்பு அதிகரித்து இருப்பதாக அவர்கள் கூறினார்கள். கூட்டணியில் இழுக்க அவருடன் கட்சி தலைவர் பேச்சு நடத்தி வருகிறார்கள். எப்படியும் கூட்டணி உறுதியாகிவிடும் என்று பாரதீய ஜனதா தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
ஏற்கனவே தெலுங்கு தேசம் – பாரதீய ஜனதா கூட்டணி உறுதியாகி விட்டது. தொகுதி பங்கீடு பற்றிய பேச்சு வார்த்தையில் இழுபறி நீடிப்பதால் கூட்டணி பற்றி அறிவிக்கப்படாமல் உள்ளது.அதோடு ஜெய்பிரகாஷ் நாரயாணன் லோக் சத்தா கட்சியும் பாரதீய ஜனதா கூட்டணியில் சேர வாய்ப்பு உள்ளது.இதன் மூலம் தமிழகத்தை போல் ஆந்திராவிலும் மெகா கூட்டணியை பாரதீய ஜனதா உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி