இவரை எதிர்த்து மாண்டியாவில் போட்டியிட தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருக்கும் நடிகை ரக்சிதா முடிவு செய்தார். இதற்காக விருப்ப மனுவும் கொடுத்து இருந்தார்.ஆனால், தேவேகவுடா சீட் கொடுக்கவில்லை. இதனால் ரக்சிதா அதிருப்தி அடைந்தார்.கன்னடம், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் நடித்துள்ள இவர் தமிழில் விஜய் ஜோடியாக ‘மதுர’ படத்தில் நடித்தார். சினிமா உலகில் ரம்யாவுக்கும், ரக்சிதாவுக்கும் கடும் போட்டி இருந்தது.
பிரபல கன்னட டைரக்டரும், நடிகருமான பிரேமை காதல் திருமணம் செய்து கொண்ட ரக்சிதா, முதலில் எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சியில் இருந்தார். அப்போது நடந்த சட்டசபை தேர்தலில் மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.இந்த பாராளுமன்ற தேர்தலில் மாண்டியா தொகுதியில் ரம்யாவை எதிர்த்து போட்டியிட்டால் வெற்றி பெற முடியும் என்று ரக்சிதா கருதுகிறார். மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் டிக்கெட் கிடைக்காததால் பா.ஜனதாவில் சேர முடிவு செய்துள்ளார்.
பா.ஜனதாவில் சேர்ந்தால் அவருக்கு மாண்டியா தொகுதியில் போட்டியிட டிக்கெட் தருவதாக அந்த கட்சி உறுதி அளித்துள்ளது.எனவே, பா.ஜனதாவில் இணைந்து மாண்டியா தொகுதியில் ரம்யாவை எதிர்த்து ரக்சிதா போட்டியிடுகிறார். இதற்காக இன்று நடிகை ரக்சிதா பா.ஜனதாவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி